பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு; இளைஞர் லடாக் வரை சைக்கிள் பயணம்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு; இளைஞர் லடாக் வரை சைக்கிள் பயணம்
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 05:15 PM

பந்தலுார்:
பந்தலுார் அருகே கிராமத்தை சேர்ந்த இளைஞர், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 15 ஆயிரம் கி.மீ., பயணத்தை துவக்கினார்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே அம்மன்காவு கிராமத்தை சேர்ந்த, பாலசுப்ரமணியம்; - மாரியம்மாள் தம்பதியின் மகன் சிவப்பிரகாஷ்,24. இவர், ஐ.டி.ஐ., படித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, பந்தலுார் கொளப்பள்ளி பஜாரில் இருந்து, கன்னியாகுமாரி வழியாக லடாக் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள நேற்று காலை புறப்பட்டார். இவர், மொத்தம் 15 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து, இவர் செல்லும் ஊர்களில் பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார். இவரை, எம்.எல்.ஏ., ஜெயசீலன், வியாபாரிகள் சங்க தலைவர்கள் ராஜா, அஷ்ரப், ஆசிரியர் சிவா, கிராம தலைவர்கள் செல்லையா மற்றும் கிராம மக்கள் வழியனுப்பி வைத்தனர்.