UPDATED : ஆக 30, 2024 12:00 AM
ADDED : ஆக 30, 2024 10:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:
சென்னை சமூக நல ஆணையர் அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளை தேர்வு செய்து, அந்தந்த சத்துணவு மையங்களில், பிரதி மாத திதிபோஜன் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சி அருகே கொல்லப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மதியம் வாழை இலையில், சாதத்துடன் சாம்பார், ரசம், பொரியல், வடை, பாயாசம் உள்ளிட்டவை, 140 மாணவர்களுக்கு விருந்தாக வழங்கப்பட்டது. அதில், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.