UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் :
காங்கேயத்தில், சென்னிமலை சாலையில் ஒரு திருமண மண்டபத்தில் நடக்கும் கண்காட்சியை, அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அரங்குகளை பார்வையிட்ட அமைச்சர், புத்தகங்களும் வாங்கினார்.
அமைச்சருடன் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன், காங்கயம் நகர தி.மு.க., ஒன்றிய செயலாளர் சூர்யபிரகாஷ், யூனியன் சேர்மன் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.