தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/4ம் தேதி எஸ்.ஐ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

4ம் தேதி எஸ்.ஐ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

4ம் தேதி எஸ்.ஐ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு


UPDATED : பிப் 25, 2026 11:22 AM

ADDED : பிப் 25, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2026 11:22 AM ADDED : பிப் 25, 2026 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 4ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 22ம் தேதி நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு வெளியான மற்றொரு அறிவிப்பில், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி ஆலோசனை கூடத்தில் வரும் 4ம் தேதி காலை 08:30 மணி முதல் நடக்கிறது.

தேர்வானவர்கள் தங்களின் பிறப்பு, கல்வி, குடியிருப்பு, சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் அசலை எடுத்து வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு https://police.py.gov.in இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பத்தாரர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 27ம் தேதி மாலை 05:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us