மாலை நேர வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி கலெக்டர் பிரசாந்த் தகவல்
மாலை நேர வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி கலெக்டர் பிரசாந்த் தகவல்
UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 09:51 AM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் மாலை நேர சிறப்பு வகுப்பில் சோர்வின்றி படிப்பை தொடர சிற்றுண்டி வழங்கி உதவும்படி கலெக்டர் பிரசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளது.
இதனையொட்டி அந்தந்த பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் ஆரோக்கியத்துடன் சோர்வின்றி படிப்பை தொடர, மாலைநேர சிற்றுண்டி (டீ, பிஸ்கேட், வடை, சுண்டல்) வழங்குவதற்கான சேவைக்கு தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களால் முடிந்த அளவிற்கு பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உங்களது சிறிய பங்களிப்பு மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வலுசேர்க்கும்.
விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள அரசுப்பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு சிற்றுண்டி அல்லது அதற்கு தேவையான பொருளை வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.