கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பற்றி பாரதியார் பல்கலையில் மாநாடு
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பற்றி பாரதியார் பல்கலையில் மாநாடு
UPDATED : ஜன 31, 2026 11:06 AM
ADDED : ஜன 31, 2026 11:07 AM
கோவை, பாரதியார் பல்கலை கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பில் மேம்பட்ட கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச மாநாடு நடந்தது.
கம்ப்யூட்டர் அறிவியல்துறை தலைவர் பொற்கொடி வரவேற்றார். பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர் குழந்தைவேல் பேசுகையில், “சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் அறிவியல் துறை அன்றாடம் ஒரு புதுமையை நோக்கி நகர்கிறது. இதிலுள்ள மென்பொருள் தொழில்நுட்பம் அனைத்து துறைக்குள்ளேயும் ஊடுருவி வியத்தகு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.
ரூட்ஸ் மல்டிகிளீன் லிட் நிறுவன இயக்குனர் ரவி பேசுகையில், “அறிவையும் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்ள இது போன்ற தொழில்நுட்ப மாநாடுகள் மிகவும் அவசியம்,” என்றார்.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரம்யசித்ரா நன்றி கூறினார். பல பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர்.

