UPDATED : ஜன 31, 2026 11:05 AM
ADDED : ஜன 31, 2026 11:06 AM
சிதம்பரம்:
கொத்தட்டை சுங்கச்சாவடியில், பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலை, கொத்தட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு, நகாய் மற்றும் எச்.எல்.எல்., நிறுவனம் சார்பில் நடந்த, 3 நாட்கள் வகுப்பில், பயிற்சியாளர்கள் தர்மசீலன் நரேந்திரன் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.
இதில், மாரடைப்பு ஏற்படும் நபர்கள் மற்றும் விபத்து ஏற்படும் நேரங்களில் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள்; மன அழுத்தத்தை கையாளும் முறை; சுங்கச்சாவடியை கடந்து செல்லும், பொதுமக்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளுதல், சாலை பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சுங்கச்சாவடி மேலாளர்கள் ஆறுமுகம், சந்தோஷ்குமார் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

