sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வேளாளர் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் கலாசார விழா

/

வேளாளர் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் கலாசார விழா

வேளாளர் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் கலாசார விழா

வேளாளர் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் கலாசார விழா


UPDATED : பிப் 18, 2026 02:51 PM

ADDED : பிப் 18, 2026 02:53 PM

Google News

UPDATED : பிப் 18, 2026 02:51 PM ADDED : பிப் 18, 2026 02:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:
ஈரோடு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இணைந்து மஞ்சள் - 26 என்ற கலாசார விழா கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், புகழ் பெற்ற பின்னணி பாடகி ஜொனிதா காந்தி, ஈரோட்டில் முதல் முறையாக நேரலை இசை நிகழ்ச்சியை வழங்கினார், பிரபல தொகுப்பாளர் மற்றும் சிந்தனை ஊக்குவிப்பாளர் ஆரி அர்ஜுனன், விஜய் டிவி புகழ் தொகுப்பாளர் ஆனந்த் மற்றும் பாவனா பாலகிருஷ்ணன் மற்றும் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்ற பரிதாபங்கள் யூடியூப் சேனலின் பிரபல யூடியூபர்கள் கோபி அண்ட் சுதாகர் ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர், செயலாளர் மற்றும் தாளாளர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்லுாரி முதல்வர்கள், புலமுதல்வர்கள், நிர்வாக மேலாளர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், யுவராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிந்தனை ஊக்குவிப்பாளர் ஆரி அர்ஜுனனின் உரை மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us