தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


UPDATED : ஜூலை 07, 2026 06:24 PM

ADDED : ஜூலை 07, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 06:24 PM ADDED : ஜூலை 07, 2026 06:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் திருவள்ளூரில், 2022 ஜனவரி, 12ல் அரசு மருத்துவ கல்லுாரிகள் திறக்கப்பட்டன.

இந்த 11 கல்லுாரிகளில், 650 'லேப்' டெக்னீஷியன், பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதற்கு முன் திறக்கப்பட்ட தேனி, கரூர், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்படவில்லை.

இந்த மருத்துவ கல்லுாரிகளில், 900 லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படாமல் தொகுப்பூதியத்திலே நிரப்பப்பட்டு வருகின்றன.

எனவே, லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரந்தரமாக எம்.ஆர்.பி., வழியாக நிரப்ப, த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us