தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'தினமலர்' வித்யாரம்பம் செஞ்சியில் கோலாகலம் குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்பு

'தினமலர்' வித்யாரம்பம் செஞ்சியில் கோலாகலம் குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்பு

'தினமலர்' வித்யாரம்பம் செஞ்சியில் கோலாகலம் குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்பு


UPDATED : அக் 21, 2026 04:56 PM

ADDED : அக் 21, 2026 04:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:56 PM ADDED : அக் 21, 2026 04:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
செஞ்சியில் விஜயதசமியொட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம் இதழ்' மற்றும் செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.

செஞ்சி மேல்களவாய் ரோடு சிறுகடம்பூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி எழுதும் நிகழ்ச்சியில், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்கள் செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ், தாசில்தார் ஏழுமலை, சுகாதாரத்துறை ஓய்வுபெற்ற உதவி இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு, செஞ்சி பார் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணன், சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கலைச்செல்வன், சாரதா நர்சரி பள்ளி தாளாளர் புரட்சி செல்வன் ஆகியோர் வித்யாரம்பம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

முன்னதாக, காலை 8:30 மணிக்கு, வித்யாரம்பம் நிகழ்வுக்கான சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனையடுத்து, சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளின் விரலைப் பிடித்து, நெல் மணியில் 'அ'னா, 'ஆ'வன்னா எழுதி, குழந்தைகளின் கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து அரிச்சுவடி எழுதிய குழந்தைகளுக்கு, அவர்கள் எழுதிய முதல் எழுத்தின் அழகிய நிகழ்வை புகைப்படம் எடுத்து, விழா அரங்கத்திலேயே புகைப்படத்துடன் கூடிய தினமலரின் சான்றிதழ் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்காக, காலை 08:00 மணிக்கே, செஞ்சி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள் குடும்பத்துடன் அணி வகுத்து வந்தனர்.

நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பெற்றோர்கள் தினமலருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும், கல்வி சாதனங்கள், எழுது பொருட்கள் அடங்கிய கிப்ட் பை வழங்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us