தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பகுப்பாய்வு கூட்டம் ஒத்திவைப்பு

ஆசிரியர் பகுப்பாய்வு கூட்டம் ஒத்திவைப்பு

ஆசிரியர் பகுப்பாய்வு கூட்டம் ஒத்திவைப்பு


UPDATED : அக் 21, 2026 04:55 PM

ADDED : அக் 21, 2026 04:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:55 PM ADDED : அக் 21, 2026 04:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
காலாண்டு தேர்வு தொடர்பாக நடக்க இருந்த ஆசிரியர் பகுப்பாய்வு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், 51 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறித்து பள்ளி வாரியாக புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள், பாடத்தின் அனைத்து விடைத்தாள், விடைகுறிப்பு, மாணவர் மதிப்பெண் பட்டியல் ஆகிய ஆவணங்களோடு ஒதுக்கப்பட்ட நாளில் ஆசிரியர் பகுப்பாய்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று, முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், விடுமுறை மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளிலிருந்து விடைத்தாள்கள் எடுத்து வருவதற்கு தேவைப்படும் கால அவகாசத்தை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த காலாண்டு பகுப்பாய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், அதன் பின்னர் மறு தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும், பகுப்பாய்வு கூட்டம் அறிவித்த போது பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us