தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி, தேர்தல் வாக்குறுதி, பாதுகாப்பு: கருத்துக்கள்!

கல்வி, தேர்தல் வாக்குறுதி, பாதுகாப்பு: கருத்துக்கள்!

கல்வி, தேர்தல் வாக்குறுதி, பாதுகாப்பு: கருத்துக்கள்!


UPDATED : மார் 10, 2026 02:12 PM

ADDED : மார் 10, 2026 02:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2026 02:12 PM ADDED : மார் 10, 2026 02:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விரைவுபடுத்த வேண்டும்!

நாட்டின் கல்வித் துறையை உலக பொருளாதாரத்துடன் இணைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு, 'ஆட்டோமேஷன்' போன்ற பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின் கனவுகளை நனவாக்குவதே அரசின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.
- நரேந்திர மோடி, பிரதமர்.

அரசியல் நாடகம்!


ஆந்திர சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் நாடகங்களை நடத்தி வருகிறார். நிதியுதவி, இலவச சமையல் காஸ் சிலிண்டர் போன்ற திட்டங்களை அவர் செயல்படுத்தவில்லை. பெண்கள் முன்னேற்றம் குறித்து அவரால் எப்படி பேச முடிகிறது?
- ஜெகன் மோகன் ரெட்டி தலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி.

பார்லி.,யில் விவாதிக்கணும்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தை கருதி, நாட்டின் வெளியுறவுக் கொள்கை, தேசிய பாதுகாப்பு, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து பார்லி.,யில் விவாதிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற வினியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.
- அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us