sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரலாற்று ஆய்வாளர் பணிக்கர் காலமானார்

வரலாற்று ஆய்வாளர் பணிக்கர் காலமானார்

வரலாற்று ஆய்வாளர் பணிக்கர் காலமானார்


UPDATED : மார் 10, 2026 02:13 PM

ADDED : மார் 10, 2026 02:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2026 02:13 PM ADDED : மார் 10, 2026 02:14 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்:
கேரளாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரும் கல்வியாளருமான கே.என்.பணிக்கர், 90, வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

நவீன இந்திய வரலாற்றை படிப்பதில் முற்போக்கான கண்ணோட்டங்களை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பணிக்கர்.

கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் பிறந்த இவர், தன் உயர்படிப்புக்குப் பின் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் வரலாற்று ஆசிரியராக இணைந்தார். அதன்பின், அத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

கடந்த 2001 - 17 வரை கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன தலைவராகவும் பதவி வகித்தார். இந்திய வரலாற்றில், காலனித்துவம் மற்றும் நவீனத்துவம் குறித்து பல படைப்புகளை இயற்றியுள்ளார்.

வரலாற்று துறையில் மார்க்சிய கொள்கையையும், மதசார்பற்ற மற்றும் அறிவியல் அணுகுமுறைகளை ஆதரித்ததற்காகவும் பரவலாக இவர் அறியப்பட்டார்.

இவரது மனைவி ஏற்கனவே காலமான நிலையில், இரண்டு மகள்களுடன் பணிக்கர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.

வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us