UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், ஆங்கில துறை சார்பில், இலக்கிய சங்க கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். ஆங்கில துறைத் தலைவர் பசுபதி, உதவி பேராசிரியர் வளர்மதி முன்னிலை வகித்தனர். இளங்கலை மூன்றாமாண்டு மாணவி இலக்கியா வரவேற்றார். முன்னாள் ஆங்கில துறைத் தலைவர் கதிர்வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
மாணவி சூர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.