தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வி.ஐ.டி., சென்னை பல்கலையில் சுற்றுச்சூழல் சட்ட கருத்தரங்கு

வி.ஐ.டி., சென்னை பல்கலையில் சுற்றுச்சூழல் சட்ட கருத்தரங்கு

வி.ஐ.டி., சென்னை பல்கலையில் சுற்றுச்சூழல் சட்ட கருத்தரங்கு


UPDATED : டிச 18, 2025 08:01 AM

ADDED : டிச 18, 2025 08:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2025 08:01 AM ADDED : டிச 18, 2025 08:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
வி.ஐ.டி., சென்னை பல்கலையில், சர்வதேச சுற்றுச்சூழல் சட்டம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

வி.ஐ.டி., துணை தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை வகித்தார். கருத் தரங்கில், நெதர்லாந்து நாட்டில் செயல்படும் சர்வதேச நீதிமன்ற நீதிபதி லியோனார்டோ நெமர் கால்டீரா பிராண்ட் பேசுகையில் , ''ஒவ்வொரு நாடும், காலநிலைகளை காக்க, தகுந்த நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

''எந்தவொரு நாடும், தனது நிலப்பரப்பை, மற்றொரு நாட்டின் நிலப்பரப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், பயன்படுத்த உரிமை இல்லை. காலநிலை மாற்றத்தில் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு, அனைவருக்கும் கூட்டு பொறுப்பு, ஒத்துழைப்பு அவசியம்,'' என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் பேசுகையில், ''மாணவர்களும், இளம் வழக்கறிஞர்களும், உலகளாவிய கண்ணோட்டத்துடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க, தங்களின் பங்களிப்பை வழங்க முயற்சி செய்ய வேண்டும்,'' என்றார்.

ஜி.வி.செல்வம் பேசுகை யில்,''சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், சட்டத்தை நிலை நிறுத்துவதும், எதிர்கால உலகை பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாதது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us