மாணவன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்
மாணவன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:46 PM
சென்னை:
வடலுாரில் ஈட்டி பாய்ந்து இறந்த பள்ளி மாணவன் குடும்பத்திற்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் மாவட்டம், வடலுாரில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்த கிேஷார் என்ற மாணவன், சிலம்பாட்டத்தில் மாநில, தேசிய அளவில், பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.
இவர் கடந்த 24ம் தேதி மாலை, 5:00 மணி அளவில், ஈட்டி எறிதல் பயிற்சி செய்யும்போது, சக மாணவர் ஒருவர் எறிந்த ஈட்டி, கிஷோர் தலையில் குத்தி காயம் ஏற்படுத்தியதாக தெரிகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவர், இறந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கல்.
இந்த விபத்திற்கு காரணம், இட வசதி இல்லாத பயிற்சி மைதானம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாததே என, மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
வருங்காலத்தில் சிலம்பாட்டத்தில், உலக அளவில் சிறந்த சாதனை நிகழ்த்தவிருந்த மாணவன் இறந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பயிற்சி தரும்போது, பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.