UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:48 PM

சென்னை:
தனியார் பள்ளியில், ஈட்டி எறிதல் பயிற்சியின்போது இறந்த, மாணவனின் பெற்றோருக்கு, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா, பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் கிஷோர், 15. வடலுாரில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 27 ம் தேதி, பள்ளி மைதானத்தில் நடந்த ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, எதிர்பாராதவிதமாக கிேஷார் தலையில் ஈட்டி பாய்ந்தது. பலத்த காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்தான்.
இதை அறிந்த முதல்வர், மாணவனின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.