UPDATED : அக் 19, 2024 12:00 AM
ADDED : அக் 19, 2024 10:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி-ன் ஒருங்கிணைந்த சேவை பதவிகளுக்கான சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம்/ பயிற்சி உதவி இயக்குநர் ஆகிய பதவிகளுக்காக சான்றிதழ் பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அக்.,27ம் தேதி வரை தங்களுடைய சான்றிதழ்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இதுகுறித்த அறிவிப்பு விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.