UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 11:26 PM

சென்னை:
மீன்வள பல்கலையில் சேர, மாணவர்களிடம் இருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை, நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலையில் 11 உறுப்பு கல்லுாரிகள், ஒரு இணைப்பு கல்லுாரியும் உள்ளன. இவற்றில், ஒன்பது மீன்வளம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன.
நடப்பு கல்வி ஆண்டில், 345 மாணவர்கள் உறுப்பு கல்லுாரிகள் வழியாகவும், 26 மாணவர்கள் இணைப்பு கல்லுாரி வழியாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கல்வி, விடுதி, உணவு கட்டணம், மீனவர் நல வாரியம் சார்பில் வழங்கப்படும்.
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய, ஜூன் 6 கடைசி நாள்.
மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, பொது கலந்தாய்வு நடக்கும். சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, நேரடி கலந்தாய்வு நடக்கும்; தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, 04365 - 256430, 94426 01908 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இ - மெயில் முகவரியான, ugadmissiontnjfu.ac.in வழியாகவும் தொடர்பு கொள்ளலாம் என, பல்கலை துணை வேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.