தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி: பதிவுக்கு அழைப்பு

மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி: பதிவுக்கு அழைப்பு

மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி: பதிவுக்கு அழைப்பு


UPDATED : செப் 29, 2026 03:13 PM

ADDED : செப் 29, 2026 03:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 03:13 PM ADDED : செப் 29, 2026 03:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூர் கலெக்டர் முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தில், 2,536 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

இதற்கு, இரண்டு புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகதிற்கு வரும், அக்., 7ல் நேரில் வருகைபுரிந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்புகள், சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணையவழி தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 04324-223555, 6383050010, 6374319939 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us