தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில் துறை வளர்ச்சி ஆகஸ்டில் 8% உயர்வு

தொழில் துறை வளர்ச்சி ஆகஸ்டில் 8% உயர்வு

தொழில் துறை வளர்ச்சி ஆகஸ்டில் 8% உயர்வு


UPDATED : செப் 29, 2026 03:12 PM

ADDED : செப் 29, 2026 03:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 03:12 PM ADDED : செப் 29, 2026 03:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
நாட்டின் தொழில்துறை வளர்ச்சி முந்தைய மாதத்தோடு ஒப்பிடும் போது கடந்த ஆக., மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி துறை சிறப்பான வளச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள, தொழில்துறை உற்பத்தி குறியீட்டு தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆக., மாதத்தில் தொழில்துறை உற்பத்தி, ஆண்டு வளர்ச்சியின் அடிப்படையில், 8 சதவீதத்தை பதிவு செய்துள்ளது. உற்பத்தி துறை வளர்ச்சி 9 சதவீதமாகவும் மின் மற்றும் எரிவாயு வினியோக துறை 12.30 சதவீதமாகவும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கனிம துறை முந்தைய ஆண்டு 15.80 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் 5.6 சதவீதமாக குறைந்துள்ளது.

தொழில்துறை உற்பத்தி குறியீடு நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் ஆக., வரையிலான 5 மாதங்களில் 6.70 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வளர்ச்சி 4.20 சதவீதமாக இருந்தது.

ஆகஸ்ட்டில் உற்பத்தி துறையில் உள்ள 23 தொழில் பிரிவுகளில் 18 பிரிவுகள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us