தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு


UPDATED : ஜன 10, 2026 04:00 PM

ADDED : ஜன 10, 2026 04:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 04:00 PM ADDED : ஜன 10, 2026 04:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், திருக்குறளின் உயர்வு குறித்த, 7 நாள் கருத்தரங்கு துவங்கி நடந்து வருகிறது.



காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட 133 அடி திருவள்ளுவர் சிலையின், 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, திருக்குறளின் உயர்வு குறித்து, 8 அமர்வுகளில் கருத்தரங்கு துவக்க விழா நடந்தது.



இதில், திருக்குறள் தொடர்பாக மாணவர்கள் பங்கேற்கும் வினாடி வினா, விவாத மேடை, கட்டுரைப் போட்டிகள் கடந்த 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.




தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழாவிற்கு, முதல்வர் மீனா தலைமை தாங்கினார். தமிழ் துறைத் தலைவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிற்றரசு வரவேற்றார்.




அண்ணாமலைப் பல்கலை மொழியியல் உயராய்வுத்துறை இயக்குநர் பேராசிரியர் சந்திரமோகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 'மொழியியல் நோக்கில் திருக்குறள் சொற்பொருள் உறவுகள்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கவுரவ விரிவுரையாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார். நிகழ்வில், மாணவ மாணவிகள் திருக்குறள் குறித்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.




வரும், 12 ம் தேதி வரை கருத்தரங்கு நடக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us