முடங்கிய அங்கன்வாடி கட்டடம், பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
முடங்கிய அங்கன்வாடி கட்டடம், பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
UPDATED : ஜன 10, 2026 03:56 PM
ADDED : ஜன 10, 2026 04:00 PM

அன்னூர்: 15 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் எட்டு மாதங்களாக முடங்கி கிடக்கிறது. அன்னூர் பேரூராட்சி, குன்னத்தூர்ராம்பாளையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் ஆறு வயது வரையிலான 20 குழந்தைகள் ஊட்டச்சத்து உண்டு கல்வி பயின்று வருகின்றனர். தற்போது சொந்த கட்டடம் இல்லாததால், சிறிய வாடகை கட்டடத்தில் மையம் செயல்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் எம்.எல்.ஏ., தனபால் ஒதுக்கிய 15 லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அப்பகுதி மக்கள் கூறுகையில், 'தற்போது குழந்தைகள் காற்றோட்டம் இல்லாத சிறிய அறையில் படித்து வருகின்றனர். 15 லட்சம் ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட கட்டடம் பயன்படாமல், எட்டு மாதங்களாக முடங்கி கிடக்கிறது,' என்றனர்.

