தேசிய திறனாய்வுப் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
தேசிய திறனாய்வுப் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
UPDATED : மார் 17, 2026 03:22 PM
ADDED : மார் 17, 2026 03:24 PM
பெருமாநல்லூர்:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு போட்டி கடந்த ஜன., 10ம் தேதி நடைபெற்றது. இதில், 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 81 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
அதில், திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அஜித் பாபு, ரித்திக் ரோஷன், இனியா, ஹரிஹரன், லிதன்யா, பிரஹதி ஆகிய ஆறு பேர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்று.
தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் சாதனை படைத்து வருகின்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தி, பாராட்டினர்.
