UPDATED : ஜூன் 03, 2025 12:00 AM
ADDED : ஜூன் 03, 2025 09:56 AM
திருப்பூர் :
வி.ஏ.ஓ., - இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவர் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு, வரும் ஜூலை 12ல் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையம் மூலம், 250 பேர், தேர்வுக்கு தயாராகிவருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் பயிற்சி பெற்றுவரும் இம்மாணவர்களுக்கு, இதுவரை நான்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஐந்தாவது மாதிரி தேர்வு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. 220 மாணவ, மாணவியர் பங்கேற்று, ஆர்வமுடன் மாதிரி தேர்வு எழுதினர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் கூறியதாவது:
குரூப் - 4க்கான ஐந்தாவது மாதிரி தேர்வை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 220 பேர் எழுதியுள்ளனர். இவர்களில், 20 பேர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெறாத புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 12 ம் தேதி தேர்வு நடைபெற உள்ளநிலையில், வரும் நாட்களில், வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.