தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி பெயரில் மெட்ரிக்குலேஷன் வார்த்தையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

பள்ளி பெயரில் மெட்ரிக்குலேஷன் வார்த்தையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

பள்ளி பெயரில் மெட்ரிக்குலேஷன் வார்த்தையை நீக்க ஐகோர்ட் மறுப்பு


UPDATED : செப் 03, 2024 12:00 AM

ADDED : செப் 03, 2024 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2024 12:00 AM ADDED : செப் 03, 2024 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளிகளின் பெயர்களில் உள்ள, மெட்ரிக்குலேஷன் என்ற வார்த்தையை நீக்கும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

உயர் நீதிமன்றத்தில், வேமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பள்ளிகளின் பெயர் உடன் சேர்த்து குறிப்பிட்டுள்ள மெட்ரிக்குலேஷன் என்ற வார்த்தையை நீக்க வேண்டும். அதற்குப் பதில் தனியார் பள்ளி என்றே குறிப்பிட வேண்டும். இதுகுறித்து, 2019, 2021, 2023ம் ஆண்டுகளில் அனுப்பிய மனுவை பரிசீலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, முதல் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.கணேசன், அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகினர்.

முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. விதிகளுக்கு முரணாக இருந்தால் ஒழிய, குறிப்பிட்ட வகையில் கொள்கை முடிவு எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட முடியாது.

நன்மை, தீமை என அனைத்து அம்சங்களையும், நிபுணர்கள் தான் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். ஏற்கனவே, மனுதாரர் தரப்பில் மனுக்கள் அனுப்பியுள்ளதால், அதை விரைந்து பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது என கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us