sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிரான்சில் உயர்கல்வி

/

பிரான்சில் உயர்கல்வி

பிரான்சில் உயர்கல்வி

பிரான்சில் உயர்கல்வி


UPDATED : செப் 06, 2024 12:00 AM

ADDED : செப் 06, 2024 02:50 AM

Google News

UPDATED : செப் 06, 2024 12:00 AM ADDED : செப் 06, 2024 02:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளமான கலாசார பாரம்பரியம், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் துடிப்பான மாணவர் வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற நாடு பிரான்ஸ்.
3,500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை கொண்ட பிரான்ஸ், வரலாற்று அடையாளங்கள், கல்வித் திறன், நவீன உணவு வகைகள் ஆகியவை மட்டுமின்றி, ஒரு தனித்துவமான அனுபவத்தையும் வழங்குகிறது.
முக்கிய பல்கலைக்கழகங்கள்:
சோர்போன் பல்கலைக்கழகம்: பாரிஸில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் பிரான்சின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பல்கலைக்கழகம் வலுவான ஆராய்ச்சி திட்டங்களுக்கு பெயர் பெற்றது.
பாரிஸ் பல்கலைக்கழகம் (யுனிவர்சிட்டி டி பாரிஸ்): பலதரப்பட்ட துறைகளில் படிப்புகளை வழங்கும் இப்பல்கலைக்கழகம், பிரான்சின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று.
இ.என்.எஸ்., பாரிஸ்: சிறந்த கல்வித் திட்டங்களுக்குப் புகழ்பெற்ற இப்பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களை உருவாக்கியுள்ளது.
யுனிவர்சிட்டி டி லியோன்: தரமான ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டங்களுக்காக அறியப்படும் இப்பல்கலைக்கழகம் பிரான்சின் ஒரு முக்கிய கல்வி மையமாக திகழ்கிறது.
ஹெச்.இ.சி., பாரிஸ்: ஐரோப்பாவின் சிறந்த வணிகப் பள்ளிகளில் ஒன்றான இக்கல்வி நிறுவனம், வணிகம் மற்றும் நிர்வாக படிப்புகளுக்கு புகழ் பெற்றது.
விண்ணப்ப செயல்முறை:
தேவையான கல்வி சான்றுகளுடன் பிரெஞ்சு அல்லது ஆங்கில மொழிப் புலமைக்கான சான்றிதலும் அவசியம். சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் அல்லது நேர்காணல்கள் தேவைப்படலாம். மாணவர் சேர்க்கை குறித்த விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
விசா அனுமதி:
ஐரோப்பிய நாடுகளை சேராத மாணவர்களுக்கு பிரான்சில் படிக்க மாணவர் விசா அவசியம். குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்ற உடன் விசாவிற்கு விண்ணப்பிக்கவும். நிதி ஆதாரம் மற்றும் சுகாதார காப்பீடு ஆகியவையும் அவசியம்.
கல்விக் கட்டணம்:
பிற மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, பிரான்சில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்கள் குறைந்த கல்விக் கட்டணத்தைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய யூனியன் அல்லாத மாணவர்களுக்கான கட்டணங்கள் பட்டப்படிப்புகளுக்கு ஆண்டிற்கு சுமார் 2,500 ஆயிரம் முதல் 4 ஆயிரம் யூரோக்கள் வரை இருக்கும். தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கு அதிக கட்டணம் இருக்கலாம்.
இதர செலவீனங்கள்:
நகரத்தைப் பொறுத்து தங்குமிடம் மற்றும் உணவிற்கான செலவீனங்கள் மாறுபடும். குறிப்பாக, பாரிஸ் மிகவும் விலை உயர்ந்த நகரம். அங்கு, சராசரி மாத செலவுகள் சுமார் ஆயிரம் முதல் 2 ஆயிரம் யூரோக்கள் வரை ஆகலாம். லியோன் அல்லது துலூஸ் போன்ற பிற நகரங்களில், மாதத்திற்கு 800 முதல் 1,500 யூரோக்கள் வரை இருக்கலாம்.
விபரங்களுக்கு:
www.campusfrance.org/en






      Dinamalar
      Follow us