sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

/

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு


UPDATED : மே 08, 2024 12:00 AM

ADDED : மே 08, 2024 09:23 AM

Google News

UPDATED : மே 08, 2024 12:00 AM ADDED : மே 08, 2024 09:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 94.71 சதவீதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட 2.19 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதனால், தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டம் 18வது இடம் பிடித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில், 236 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளி என, 78 பள்ளிகள் உள்ளன. 20 அரசு உதவிபெறும் பள்ளிகள், 138 மெட்ரிக்குலேசன் மற்றும் சுயநிதி பள்ளிகள் உள்ளன.

இப்பள்ளிகளில் இருந்து, 11,455 மாணவர்கள், 13,787 மாணவியர் என, 25,242 பேர் தேர்வு எழுதினர். இதில், 10,632 மாணவர்கள், 13,275 மாணவியர் என, 23,907 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 92.89 சதவீதமும், மாணவியர் 96.29 சதவீதம் என, மொத்த தேர்ச்சி விகிதம் 94.71 சதவீதம்.

அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 4,018 பேர் தேர்வு எழுதியதில், 3,432 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 85.42. இதில், தேர்வு எழுதிய 5,868 மாணவியரில், 5,459 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.03.

செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், அஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி, தையூர் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி, இரும்பேடு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தேர்வு எழுதிய 3,821 மாணவ - மாணவியரில், 3,649 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.49. தேர்வு எழுதிய 1,364 மாணவர்களில், 1,243 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 91.12. 2,457 மாணவியரில், 2,406 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.92.

குரோம்பேட்டை அய்யசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி, செய்யூர் சிறுமலர் மேல்நிலைப் பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில், தேர்வு எழுதிய மாணவர்கள் 11,545 பேரில், 11,367 தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.45. தேர்வு எழுதிய 6,073 மாணவர்களில், 5,957 தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி சதவீதம் 98.08. 5462 மாணவியரில், 5,410 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.08. மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில், 72 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 92.52. அப்போது, மாநில அளவில், செங்கல்பட்டு மாவட்டம் 22வது இடம்பெற்றது. இந்த ஆண்டு, 2.19 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்து, 94.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால், மாநில அளவில் 18வது இடம் பிடித்துள்ளது.

சென்னை மற்றும் வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதத்தை விட, செங்கல்பட்டு மாவட்டம் 18வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்தார்.

பின், மாநில அளவில் 18வது இடம் பெற்றது குறித்து, கலெக்டர் அருண்ராஜிடம், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

மாநில அளவில், செங்கல்பட்டு மாவட்டம் 18வது இடம் பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அருண்ராஜ் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம்.
மாணவி ஆட்லின் வாலன்டினா: செங்கல்பட்டு, நென்மேலியில் வசிக்கிறேன். தந்தை பாபு, ஊழல் எதிர்ப்பு தன்னார்வலராக உள்ளார். நென்மேலி, கோகுலம் பப்ளிக் பள்ளியில், 10ம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., படித்தேன். பிளஸ் 1, பிளஸ் 2, திருக்கழுக்குன்றம் அரசுப் பள்ளியில் படித்தேன். காமர்ஸ், அக்கவுண்டன்சி ஆர்வத்தால், காமர்ஸ் படித்தேன். பி.காம்., முடித்த பின், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத விரும்புகிறேன்.

திருக்கழுக்குன்றம்.
மாணவி புவனேஸ்வரி: என் தந்தை ஆனந்தன், விவசாயக் கூலித் தொழிலாளி. ஆயப்பாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, புதுப்பட்டினம் அரசுப் பள்ளியில் படித்தேன். இன்ஜினியராகவோ அல்லது டாக்டராகவோ விருப்பம். நீட் தேர்வும் எழுதியுள்ளேன்.

மாணவி யாமினி:
தந்தை தனசேகரன், கொத்தனாராக பணியாற்றுகிறார். திருக்கழுக்குன்றம், பாரதி வித்யாலயா பள்ளியில், துவக்க கல்வி படித்து, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உயர்நிலை, மேல்நிலை படித்தேன். அறிவியல், கணிதம் ஆகியவற்றில் உள்ள விருப்பத்தால், 'பயோ - மேத்ஸ்' படித்தேன். டாக்டராக விருப்பம்.

மாணவி சஞ்சனா:
செய்யூர் பகுதியில் இருந்து மதுராந்தகம் இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு, 20 கி.மீ., துாரம் பயணித்து வந்து படித்தேன். பள்ளி பாட வேளைகள் தவிர்த்து, கூடுதலாக காலை மற்றும் இரவு நேரங்களில் நன்றாக படித்தேன். ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், பெற்றோர் தந்த ஊக்கத்தாலும், நல்ல மதிப்பெண் பெற்றுள்ளேன்.

பள்ளிவாரியாக தேர்ச்சி விகிதம்

பள்ளி தேர்வு எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் சதவீதம்ஆதிதிராவிடர் பள்ளி 292 269 92.12ஆங்கிலோ இந்தியன் 173 170 98.27அரசு உதவிபெறும் பள்ளி 2,277 2,189 96.14அரசு பள்ளி 9,011 8,103 89.92நகராட்சி பள்ளி 574 514 89.55பகுதி அரசு உதவிபெறும் பள்ளி 1,544 1,460 94.56சுயநிதி பள்ளி 10,692 10,558 98.75சுயநிதி, பள்ளி கல்வித் துறை 670 639 95.37உண்டு உறைவிட பள்ளி 9 5 55.56மொத்தம் 25,242 23,907 94.71

தேர்ச்சி சதவீதம்
ஆண்டு தேர்வு எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் சதவீதம்2022 32,690 30,514 93.342023 31,916 29,528 92.522024 25,242 23,907 94.71

டாப் 10 அரசு பள்ளி மாணவர்கள்
பெயர் பள்ளி மதிப்பெண்ஏ.சுஜிதா எம்.பி.என்., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை 581கே.சிவகார்த்திக் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை 579பி.எம்.ஆட்லின் வாலன்டினா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருக்கழுக்குன்றம் 573எம்.யாம்னிதேவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம் 571வி.ஹரிணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம் 570ஜி.ஸ்ரீமதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அச்சிறுபாக்கம் 570ஏ.புவனேஸ்வரி அரசு மேல்நிலைப் பள்ளி, புதுப்பட்டினம் 569எஸ்.மோனிகா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அச்சிறுபாக்கம் 569ஜி.மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம் 568டி.யாமினி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருக்கழுக்குன்றம் 567எம்.ரமிதா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம் 566டி.சஞ்சனா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம் 564

அரசு பள்ளிகள்

*செய்யூர் அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டின் 12ம் வகுப்பில், உயிரியல் - கணிதம் பாடப்பிரிவில் 4 பேர், அறிவியல் பிரிவில் 24 பேர் மற்றும் வரலாறு பிரிவில் 19 பேர் என, மொத்தம் 38 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 24 மாணவர்கள் 14 மாணவியர் என, மொத்தம் 38 பேரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர்.
* காட்டாங்கொளத்துார் ஒன்றியம், அஞ்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 18 மாணவர்கள், 35 மாணவியர் என, மொத்தம் 53 மாணவ -- மாணவியர் 12ம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த பள்ளியில் தேர்வு மையம் இல்லாததால், 5 கி.மீ., தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இவர்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.
* திருப்போரூர் ஒன்றியம், தையூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 30 மாணவர்களும் தேர்ச்சியடைந்தனர்.

பாடவாரியாக நுாற்றுக்கு நுாறு

பாடம் அரசு ஆதிதிராவிடர் நலம் சுயநிதி மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன் மொத்தம்தமிழ் - 1 60 1 3 65இயற்பியல் 9 - 9பொருளியல் 27 27 5 191 3 253புவியியல் 2 2 4வணிகவியல் 30 34 11 281 2 358வேதியியல் 1 14 1 16கணினி அறிவியல் 11 11 8 198 2 230உயிரியியல் 1 8 9கணிதவியல் 7 6 50 2 65வரலாறு 1 - -1கணக்குப்பதிவியல் 3 5 84 1 93வேளாண்மையில் 45 45அடிப்படை இயந்திரவியல் 27 - 27வேலைவாய்ப்பு திறன் 1 1 2செவிலியம் - 57 57தணிக்கையியல் 26 68 19 - 113வணிகக்கணிதம் 15 - 15கணினி தொழில்நுட்பம் 5 2 1 54 - 62மொத்தம் 179 215 92 924 14 1,424






      Dinamalar
      Follow us