தொழில் வல்லுநர்களில் இந்தியர்களே அதிகம்: சொல்வது இங்கிலாந்து ஆய்வு!
தொழில் வல்லுநர்களில் இந்தியர்களே அதிகம்: சொல்வது இங்கிலாந்து ஆய்வு!
UPDATED : அக் 15, 2024 12:00 AM
ADDED : அக் 15, 2024 10:37 PM
லண்டன்:
இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அதிகம் பேர் தொழில் வல்லுநர்களாக இருக்கிறார்கள், என பாலிசி எக்ஸ்சேஞ் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
நவீன பிரிட்டனில், ஜனநாயகம், கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் எந்த நாட்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற பாலிசி எக்ஸ்சேஞ் அமைப்பு ஆய்வு செய்தது. இதில் இங்கிலாந்தில் அதிக எண்ணிக்கையிலான தொழில்முறை பணியாளர்களைக் கொண்டவர்களாக இந்தியர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் தங்கள் நாட்டின் வரலாறு மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் தங்கள் தேசிய பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.
பிரிட்டிஷ் வாழ் இந்தியர்கள், தாங்கள் சார்ந்த துறையில் நிபுணர்களாகவும் உள்ளனர், அவர்களில் 71 சதவீதம் பேர் தனக்கு சொந்தமான வீட்டிலேயே வசிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.