UPDATED : அக் 15, 2024 12:00 AM
ADDED : அக் 15, 2024 10:36 PM
பெலகாவி:
கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், கிடைக்கும் பணத்தை கொண்டு ஒரு பெண், மாணவர்களுக்கான நுாலகம் அமைத்தார்.
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களில், கிரஹலட்சுமி திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த தொகையை நல்ல முறையில், தங்கள் தேவைக்கு பயன்படுத்துகின்றனர்.
ஒருவர், குளிர்சாதன பெட்டி வாங்கினார். மற்றொருவர், ஊருக்கு இனிப்புடன் விருந்து அளித்தார். ஒரு தாய், தன் மகனுக்கு பைக் வாங்கினார். இன்னொரு பெண், வெள்ளி கிரீடம் தயாரித்து, அம்பாளுக்கு சமர்ப்பித்தார். இது போன்று பலரும், சிறு சிறு தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
பெலகாவி, ராய்பாகின் மன்டூரா கிராமத்தில் வசிப்பவர் மல்லவ்வா பீமப்பா மேடி. பஞ்சாயத்து உறுப்பினர். இவருக்கு கிரஹலட்சுமி திட்டத்தின் பணம் கிடைக்கிறது. கிரஹலட்சுமியின் பணம், தனக்கு கிடைக்கும் ஊதியத்தை சேமித்து வைத்து, கிராமத்தினர் உதவியுடன் மாணவர்களுக்காக நுாலகம் அமைத்துள்ளார்.
நேற்று, இந்த நுாலகம் திறந்து வைக்கப்பட்டது.