sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிக்கு வராத மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க அறிவுறுத்தல்

/

பள்ளிக்கு வராத மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க அறிவுறுத்தல்

பள்ளிக்கு வராத மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க அறிவுறுத்தல்

பள்ளிக்கு வராத மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க அறிவுறுத்தல்


UPDATED : பிப் 12, 2026 10:08 PM

ADDED : பிப் 12, 2026 10:16 PM

Google News

UPDATED : பிப் 12, 2026 10:08 PM ADDED : பிப் 12, 2026 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசு பள்ளிகளில் ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவர்களையும், பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, அதிகாரிகள் நிர்ப்பந்திப்பது, தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த ஆண்டு, பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது என, மத்திய கல்வி அமைச்சகத்தின், 'யுடைஸ் பிளஸ்' அறிக்கை தெரிவித்துள்ளது.

இலக்கு

துவக்கப் பள்ளிகளில் 2.7; நடுநிலைப் பள்ளிகளில் 2.8; மேல்நிலைப் பள்ளிகளில் 8.3 சதவீதம், இடைநிற்றல் அதிகரித்து உள்ளது. இதையடுத்து, 'இடைநிற்றல் இல்லாத தமிழகம்' என்ற இலக்கை அடைய, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் பயனாக, அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில், 1,400 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை, பெற்றோர் ஒத்துழைப்பில்லாமை உள்ளிட்ட காரணங்களால், அவ்வப்போது மாணவர்களின் வருகைப் பதிவில் சரிவு ஏற்பட்டது. தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் நடக்கின்றன. அதில், இடைநின்ற மாணவர்களையும் அனுமதிக்கும்படி, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்; இது, தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது.

இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
தமிழக கல்வி விதிகளின்படி, பொதுத்தேர்வு எழுத, 75 சதவீதம் வருகைப்பதிவு கட்டாயம். தற்போது, வருகைப் பதிவு இல்லாத மாணவர்களிடம் மருத்துவ சான்றிதழ், பெற்றோர் கடிதம் போன்றவற்றை பெற்றுக் கொண்டு, அவர்களை அனுமதிக்கும்படி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மாணவர்கள் அதற்கும் தயாராக வருவதில்லை.

பாதிப்பு

அவர்களிடம் செய்முறை குறிப்பேடுகளும் இல்லை. இந்நிலையில், காணாமல் போய்விட்டதாக எழுதி வாங்கிக் கொண்டு, அவர்களை நன்றாக படிக்கும் மாணவர்களுடன் இணைத்து, செய்முறை தேர்வுகளை செய்ய விடுகிறோம். அதுவும் தெரியாவிட்டால், அவர்களை விடைகளை பார்த்து எழுத வைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்தாலும், எழுத்து தேர்வில், அவர்களால் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us