தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவிலுக்கு வந்து மனதிருப்தியுடன் செல்கிறேன் தினமலர் நுாலகத்தில் 81 வயது முதியவர் பரவசம்

கோவிலுக்கு வந்து மனதிருப்தியுடன் செல்கிறேன் தினமலர் நுாலகத்தில் 81 வயது முதியவர் பரவசம்

கோவிலுக்கு வந்து மனதிருப்தியுடன் செல்கிறேன் தினமலர் நுாலகத்தில் 81 வயது முதியவர் பரவசம்


UPDATED : பிப் 13, 2026 01:17 PM

ADDED : பிப் 13, 2026 01:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2026 01:17 PM ADDED : பிப் 13, 2026 01:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கோவிலுக்கு வந்து கடவுளை தரிசித்த மனதிருப்தியுடன் செல்வதாக, 'தினமலர்' நுாலகம் குறித்து 81 வயது முதியவர் பரவசத்துடன் கூறினார்.

குடும்பத்தில் ஒருவர்


வேலுார் சோழவரத்தை சேர்ந்தவரும், பெங்களூரு நந்தினி லே அவுட்டில் வசிப்பவருமான கோபிநாத், 51, நேற்று நுாலகத்திற்கு வருகை தந்தார். புத்தகங்களை பார்த்த பின், அவர் கூறியதாவது:

அனைத்து புத்தகங்களையும் பணம் கொடுத்து வாங்கி, நம்மால் படித்து விட முடியாது. ஆனால் நுாலகத்தில் போதும் என்ற அளவுக்கு புத்தகம் படிக்க முடியும். இங்கு அனைத்து வகை புத்தகங்களும் உள்ளன.

ஆன்மிகம், குறுநாவல்கள், தலைவர்களின் சுயசரிதை, அறிவியல், அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட புத்தகங்கள் இங்கு வருவோரை கவரும். பெங்களூரில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதே அரிது. புத்தகம் தேடி அலையும் தமிழர்கள், இனி இந்த நுாலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இங்கு உள்ள புத்தகங்களை படித்து, தமிழர்கள் தங்கள் வாசிப்பு தாகத்தை தீர்த்து கொள்ள வேண்டும். நான் தினமும் தினமலர் நாளிதழ் படிக்கிறேன். தினமலர் நிர்வாகம் தங்கள் வாடிக்கையாளர்களை, குடும்பத்தில் ஒருவர் போன்று பார்க்கிறது. இது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை


இவரை தொடர்ந்து நுாலகத்திற்கு வந்த, ஹெச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜில் வசிக்கும் காசினிவேந்தன், 63 கூறியதாவது:

எனது சொந்த ஊர் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பெரும்பத்து கிராமம். பெங்களூரில் 28 ஆண்டுகளாக வசிக்கிறேன். 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தில், விமான புறப்பாடு பிரிவில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன்.

தமிழ் புத்தகங்களை தினமும் படிக்கிறேன். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், ஜெயமோகன், வேலராமமூர்த்தி எழுதிய புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தினமலர் நுாலகத்திற்கு வந்ததும், கேரள கோவில்கள் தொடர்பான புத்தகத்தை படித்தேன். அதில் நிறைய கோவில்கள் பற்றிய தகவல் உள்ளது.

நுாலகத்தில் இருக்கும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க, அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, நிறைய புத்தகங்கள் வாங்கி இங்கு வைக்கலாம் என்பது எனது ஆலோசனை. இந்த நுாலகம் குறித்து இளம் தலைமுறைக்கும் தகவல் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாசிப்பு தாகம்


தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பாலகங்காதர குப்தா, 81, பெங்களூரு வித்யாரண்யபுராவில் உள்ள தன் மகன் வீட்டில் வசிக்கிறார். இவர், 'தினமலர்' அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு நேற்று வருகை தந்தார்.

சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு, சிவாஜி கணேசன் தொடர்பான புத்தகங்களை ஆர்வமாக படித்தார். ஆன்மிக புத்தகங்களையும் ஆர்வமாக படித்தார்.

பின், அவர் கூறியதாவது:

இந்தியா என்றால் அசோக சக்கரம் போல, பத்திரிகை என்றால் அது, 'தினமலர்' நாளிதழ் தான். கிட்டத்தட்ட, 60 ஆண்டுகளாக தினமும் தினமலர் நாளிதழ் படிக்கிறேன். எனக்கு முதன்முதலில் தினமலர் நாளிதழை, படிக்க கொடுத்தவர் மாதேஸ்வரன் என்பவர் தான்.

அவரை எப்போதும் மறக்கவே மாட்டேன். நான் வசிக்கும் வித்யாரண்யபுராவில் இரண்டு நுாலகம் உள்ளது. அங்கு தமிழ் புத்தகம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. என்னை போன்று தமிழ் புத்தகம் வாசிக்க நினைப்போரின் தாகத்தை தீர்க்கும், பானகம் தான் இந்த நுாலகம்.

தினமலரில் வெளியாகும் சிறுவர் மலரை படிக்கும் போது, நான் குழந்தையாகவே மாறி விடுகிறேன். கோவிலுக்கு வந்து சாமியை தரிசித்த மனதிருப்தியுடன் இங்கிருந்து செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் நாளிதழ் பற்றி அவர் பேசும் போது, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரது முகத்தில், புதிய உற்சாகத்தை பார்க்க முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us