sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கல்

கல்லுாரி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கல்

கல்லுாரி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கல்


UPDATED : பிப் 13, 2026 01:15 PM

ADDED : பிப் 13, 2026 01:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2026 01:15 PM ADDED : பிப் 13, 2026 01:17 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி நிறுவன செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினர். தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் தலைவருமான தனசேகரன் திட்டத்தை துவக்கி வைத்து, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கினார்.

மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக்குநர் (பொறுப்பு) கார்த்திகேயன், டீன் சஞ்சய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா, துணை டீன் சவுந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த டேப்லெட் கல்வி பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. மாணவர்கள் திறன் அடிப்படையிலான பயிற்சி தொகுதிகள், தொடர்ச்சியான மற்றும் இறுதி மதிப்பீடுகள், வருகை பதிவு, திறன் அடிப்படையிலான மருத்துவக் கல்வி பாடத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ள முடியும் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us