UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 10:26 PM

ஜப்பான் அரசின் கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்திய மாணவர்களுக்கான பிரத்யேக ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தை வழங்குகிறது.
துறைகள்:
கலை பிரிவுகள், சமூக அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங், உயரியல் மற்றும் பயோடெக்னலாஜி, அக்ரிகல்ச்சர் மற்றும் பிசரி, என்விரான்மெண்டல் சயின்ஸ், பார்மசூடிக்கல் அறிவியல், ஜியாலஜி மற்றும் ஜியோ இன்பர்மேடிக்ஸ், சிவில் இன்ஜினியரிங், ஆர்கிடெக்ச்சர், மெட்டீரியல் சயின்ஸ் அல்லது இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ரோபாடிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, விளையாட்டு அறிவியல்.
கல்வித் தகுதிகள்:
பள்ளி மற்றும் இளநிலை பட்டப்படிப்பை ஜப்பானில் மேற்கொண்டவராக இருக்கக்கூடாது. முதுநிலை அல்லது ஆராய்ச்சி படிப்பை ஜப்பானில் மேற்கொள்ள தேவையான தகுதியை பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும், துறை சார்ந்த பாடப்பிரிவில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஜப்பானிய மொழியை கற்கும் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், ஜப்பானில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆர்வமும், திறனும் பெற்றவராகவும் இருத்தல் அவசியம்.
வயது வரம்பு:
இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க, 1990 ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
கால அளவு:
2025ம் கல்வியாண்டிற்காக வழங்கப்படும் இந்த உதவித்தொகை திட்டம் ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2027 வரை செயல்படுத்தப்படுகிறது. முதல் 6 மாதகாலம் ஜப்பானிய மொழியை கற்பதற்கான காலகட்டமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
உதவித்தொகை சலுகைகள்:
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களது பல்கலைக்கழக கல்விக் கட்டணம் மற்றும் நுழைவுத்தேர்வு கட்டணம் ஜப்பானிய அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதர செலவினங்களுக்காக மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இவைதவிர, ஜப்பான் சென்று, வர விமான செலவு, உள்நாட்டு போக்குவரத்து செலவு ஆகியவையும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
www.in.emb-japan.go.jp/Education/Research_Student.html எனும் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் scholarship-india@nd.mofa.go.jp எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 3
விபரங்களுக்கு:
www.in.emb-japan.go.jp/Education/Research_Student.html மற்றும் www.education.gov.in