sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு பயிற்சி

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு பயிற்சி

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு பயிற்சி


UPDATED : ஏப் 02, 2024 12:00 AM

ADDED : ஏப் 02, 2024 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2024 12:00 AM ADDED : ஏப் 02, 2024 07:06 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்:
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான பயிற்சிக்கு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 15 மாணவ, மாணவியர், 45 நாள் பயிற்சிக்கு, சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், கடந்த ஜன.,யில், ஜே.இ.இ., முதன்மை தேர்வு எழுதினர். அதில் பெற்ற மதிப்பெண் மூலம், 7 மாணவர்கள், 6 மாணவியர், 2 மாற்றுத்திறனாளிகள் என, மொத்தம், 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி முகாம், சென்னை செங்கல்பட்டில் உள்ள, டிரேடு பெசிலிசேஷன் மையத்தில் மே, 23 வரை, 45 நாட்கள் நடக்கிறது.

இப்பயிற்சியில், மாணவர்களுக்கு இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு தயார்படுத்தப்படுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, பஸ்சில் வழியனுப்பி வைக்கப்பட்டனர். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர், மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தனர்.

சென்னை சென்ற பஸ்சில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, 11 பேர், நாமக்கல் மாவட்டத்தில், 15 பேர், பெரம்பலுார் மாவட்டத்தில், 11 பேர் என, மொத்தம், 37 மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us