UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 10:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலை இழப்புகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும், எதிர்காலத்தில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3 சதவீதத்திற்கும் கீழே குறையும் என்றும் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், 2017-18 காலகட்டத்தில் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் தற்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளது என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்ட அவர், கடந்த 2017-18ல் 38 சதவீதமாக இருந்த தொழிலாளர் பங்கேற்பு தற்போது 44 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் வேலை வாய்ப்பு-மக்கள் தொகை விகிதம் 31 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது, என்றும் தெரிவித்தார்.