தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லை தமிழ் சங்க புத்தக வெளியீட்டு விழா

கல்லை தமிழ் சங்க புத்தக வெளியீட்டு விழா

கல்லை தமிழ் சங்க புத்தக வெளியீட்டு விழா


UPDATED : பிப் 16, 2026 12:50 PM

ADDED : பிப் 16, 2026 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2026 12:50 PM ADDED : பிப் 16, 2026 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் தேசம் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

கல்லை தமிழ் சங்க தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். பகுத்தறிவு இலக்கிய மன்ற செயலாளர் முருகன், அரங்கன் வள்ளியம்மை கவிதாலய செயலாளர் அருள்ஞானம், அறிவுத்திருக்கோவில் திட்ட அலுவலர் வெங்கடசுப்பன் முன்னிலை வகித்தனர். கல்லை தமிழ் சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

திருக்குறள் அதிகாரத்திற்கு ஊத்தங்கால் கோவிந்தராஜூ, பேராசிரியர் ஞானசுந்தரத்தின் தமிழ் தொண்டு குறித்து இணை செயலாளர் ராமானுஜன், மொழி ஞாயிறு தேவநேயபாவாணன் குறித்து புலவர் சிலம்பூர்க்கிழான், மணிமேகலையின் மாண்பு குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் பேசினர்.

கெடிலம் பரிக்கல் சந்திரன் எழுதிய திருக்குறள் தேசம் எனும் புத்தகத்தை, தமிழக கல்வியாளர் பேரவை மாநில தலைவர் அருணா தொல்காப்பியன் வெளியிட்டார்.

தென்னாற்காடு மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆசுகவி ஆராவமுதன், கல்லை தமிழ் சங்க துணை தலைவர் அம்பேத்கர், சண்முக பிச்சப்பிள்ளை, கவிஞர் நடேசமணி, நல்லாசிரியர் சாதிக்பாஷா, சாந்தகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பேச்சாளர் லட்சுமிபதி ஆய்வுரை வழங்கினார். செயலாளர் மதிவாணன் தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us