UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: மதிப்பெண்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறிகையில், ‘இக்கல்லூரியில் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த மே மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவில், மிகச் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் 330 பேரில் 18 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆனால், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு சட்டத் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதிப்பெண்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் இப்போக்கை கண்டித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்று தெரிவித்தனர்.

