UPDATED : ஆக 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நாகமலைபுதுக்கோட்டை: “தமிழ் இணைய தளங்களில் ‘தினமலர்’ இணைய தளம் முதலிடம் வகிக்கிறது. இதில் செய்திகள் உடனுக்குடன் ‘அப்டேட்’ செய்யப்படுகின்றன,” என்று கல்லூரி கருத்தரங்கில் பேராசிரியர் இளங்கோவன் கூறினார்.
மதுரை நாகமலைபுதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் ‘தமிழில் இணையதள வளர்ச்சி’ என்ற பெயரில் கருத்தரங்கு நடந்தது.
‘தமிழில் இணையதள வளர்ச்சி’ என்ற தலைப்பில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் பேசுகையில், ‘தமிழில் உள்ள இணைய தளங்களில் ‘தினமலர்’ இணையதளம் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
இதில் செய்திகள் உடனுக்குடன் ‘அப்டேட்’ செய்யப்படுகின்றன. விளையாட்டு, சினிமா உட்பட அனைத்தும் இடம் பெற்றுள்ளது சிறப்பு அம்சம். மற்ற இணைய தளங்களைப் பயன்படுத்தும் போது ‘பான்ட்’ பிரச்னை ஏற்படுகிறது.
‘தினமலர்’ இணைய தளத்தில் ‘பான்ட்’ பிரச்னை இல்லை. ‘தினமலர்’ இணைய தளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்துள்ளவர்களுக்கு தினமும் ஒரு இ-பேப்பர் அவர்களுடைய இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது’ என்றார்.

