UPDATED : செப் 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை குனியமுத்துõரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ‘சோல்ஸ் மீட்-2008’ என்ற உயிர் அறிவியல் துறைத்தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி செப்., 5ம் தேதி நடக்கிறது.
சொசைட்டி ஆப் யுனைடெட் லைப் சயின்சஸ் நிறுவனம், கன்ஸார்சியம் கிளீனிக்கல் ரிசர்ச், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உயிரியல் துறை இணைந்து நடத்துகின்றன.
இந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 50க்கும் அதிகமான உயிர் அறிவியல் துறைத்தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மண்டல அளவில் உயிரியல் தொடர்பான மாணவர்கள் சந்திப்பு நாளை நடக்கிறது. இவர்களுக்கு கட்டுரைப்போட்டி, போஸ்டர் வடிவமைத்தல், விவசாத மேடை, வினாடிவினா, கலை மற்றும் புகைப்படக்கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இத்தகவலை கன்ஸார்சியம் கிளீனிக்கல் ரிசர்ச் இயக்குனர் அனந்தபத்மநாபன் தெரிவித்தார்.

