எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி மையத்தில் அனிமேஷன் பட்டயப் படிப்பு
எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி மையத்தில் அனிமேஷன் பட்டயப் படிப்பு
UPDATED : ஜன 26, 2013 12:00 AM
ADDED : ஜன 26, 2013 07:25 AM
தமிழக அரசு செய்திக் குறிப்பு: அரசு திரைப்பட பயிற்சி மைய மாணவர்கள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படங்களை தயாரிக்கும் வகையில், எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், பட்டயப்படிப்பை துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த பயிற்சி நிறுவனத்தில், வரும் கல்வியாண்டு முதல், மூன்றாண்டு பட்டயப்படிப்புத் தொடங்கப்படுகிறது. பட்டயப்படிப்பு பயில்வோருக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தால், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பட்டயம் வழங்கப்படும்.
ஓவியக் கலைத்திறன், திரைப்பட தொழில்நுட்பத்திறன், சிறந்த காட்சித்திறன் கொண்ட பட்டதாரிகள், இதில் சேரலாம். இப்படிப்புகளை துவக்க, 9.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
