தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேருந்து தினக் கொண்டாட்டம்: அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

பேருந்து தினக் கொண்டாட்டம்: அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

பேருந்து தினக் கொண்டாட்டம்: அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு


UPDATED : பிப் 14, 2013 12:00 AM

ADDED : பிப் 14, 2013 07:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2013 12:00 AM ADDED : பிப் 14, 2013 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள, கல்லூரிகளின் மாணவர்கள், ஆண்டு தோறும், பஸ் டே கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டங்களினால், பஸ்களில் பயணிப்பவர்களுக்கும், சாலைகளில் செல்பவர்களுக்கும், மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

பஸ் கூரையின் மீது நின்று கொண்டு, ஆர்ப்பரிப்பில் ஈடுபடுவது, மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இந்நிலையில், பஸ் டே கொண்டாட்டங்களுக்கு, சென்னை ஐகோர்ட், 2011ம் ஆண்டு, தடை விதித்தது. இந்த தடை உத்தரவு, அமலில் இருந்தும், பஸ் டே கொண்டாட்டங்களுக்கு, மாணவர்கள் முயற்சிக்கின்றனர். அதை, போலீசாரும் தடுக்கின்றனர்.

இதுகுறித்து, ஒரு ஆங்கிலப் பத்திரிகையில், செய்தி வெளியானது. இதற்கிடையில், ஐகோர்ட்டில், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற் சங்கத்தின், மாநகரத் தலைவர், தளபதி என்பவர், தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி வெங்கட்ராமன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், "மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தயக்கம் காட்டப்படுகிறது. ஓட்டுனர், நடத்துனர்களுக்கு, சிரமம் ஏற்படுகிறது. மாணவர்களை தடுத்தால், ஓட்டுனர், நடத்துனர்களை தாக்குகின்றனர். எனவே, ஒவ்வொரு பஸ்சுக்கும், போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை, காட்டினார். இதையடுத்து, பத்திரிகையில் வெளியான சம்பவம் குறித்து, அரசு தரப்பில், அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, முதல் பெஞ்ச்தள்ளிவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us