தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ நர்ச்சர் நிறுவனத்துடன் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

ஐ நர்ச்சர் நிறுவனத்துடன் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

ஐ நர்ச்சர் நிறுவனத்துடன் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒப்பந்தம்


UPDATED : பிப் 14, 2013 12:00 AM

ADDED : பிப் 14, 2013 12:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2013 12:00 AM ADDED : பிப் 14, 2013 12:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காக ஐ நர்ச்சர் கல்வி நிறுவனத்துடன் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

பாடத்திட்டங்களும், படிப்புகளும் காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றால்தான் படிக்கும் மாணவர்கள் எளிதாக வேலை வாய்ப்பினை பெற முடியும். அதற்கு பல்கலைக்கழகங்களும் தொழிற்துறையும் இணைந்து பாடத்திட்டங்களை அமைக்க வேண்டும். தொழில்துறைக்கு சம்பந்தமில்லாமல் இருக்கக்கூடிய பாடத்திட்டங்களை படிப்பதால்தான் பல இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

கல்வி வளர்ச்சியின் தேவையை உணர்ந்து செயல்படக்கூடிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ நர்ச்சர் நிறுவனம், தற்போதைய தொழில்துறையின் தேவைகளை ஆராய்ந்து வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட தொழில்துறையைச் சார்ந்த அதிகாரிகளோடு இணைந்து அவர்களின் எதிர்கால தொழில்நுட்ப தேவைகள், பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய தொழில் அறிவு ஆகியவற்றை திட்டமிட்டு பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது தேசிய அளவில் 7 பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் செய்து பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது.

தற்போது சென்னையிலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மொபைல் அப்ளிகேசன் டெவலப்மென்ட், அட்வர்டைசிங் அண்ட் கிரியேடிவ் மேனேஜ்மென்ட், ஐ.டி. இன்ப்ராஸ்டரக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் ஆகிய முதுநிலை படிப்புகளை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்படிப்புகள் வரும் கல்வி ஆண்டு முதல் கற்றுத்தரப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத் துறையில் சென்டர் ஆப் எகசலன்ஸ் மையம் அமைக்கப்படும்.

இது குறித்து ஐ நர்ச்சர் நிறுவனத்தினரிடம் கேட்டபோது, “தொழிற்துறையில் நீண்ட காலமாக பணியாற்றும் வல்லுநர்களை கொண்டு கற்றுத்தரப்படுவதால், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்த முடியும். மேலும் பல பல்கலைக்கழகங்களோடு இணைந்து பாடத்திட்டங்களை வழங்க இருப்பதாக கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us