இலவச மடிக்கணினி கேட்டு அண்ணா பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இலவச மடிக்கணினி கேட்டு அண்ணா பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : பிப் 16, 2013 12:00 AM
ADDED : பிப் 16, 2013 06:29 AM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளில், 3ம் ஆண்டு படிக்கும் பொறியியல் மாணவ, மாணவியர், 1,800 பேருக்கு, தமிழக அரசின் இலவச லேப்-டாப் வழங்கும் விழா, அண்ணா பல்கலை வளாகத்தில், நேற்று மாலை நடந்தது.
சென்னை மேயர் துரைசாமி, மாணவ, மாணவியருக்கு, லேப்-டாப்களை வழங்கினார். இதில், பல்கலை துணைவேந்தர் காளிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, தங்களுக்கும் லேப்-டாப் வழங்கக்கோரி, இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவ, மாணவியர், பல்கலை முன், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், மேயர் பேசுகையில், "உங்களுக்கு, மார்ச் இறுதிக்குள், லேப்-டாப் வழங்க, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்," என, உறுதி அளித்தார். அதன்பின், மாணவர்கள், ஆர்பாட்டத்தை கைவிட்டனர்.
