தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் திறந்தவெளி கிணறு - பெற்றோர் அச்சம்

பள்ளியில் திறந்தவெளி கிணறு - பெற்றோர் அச்சம்

பள்ளியில் திறந்தவெளி கிணறு - பெற்றோர் அச்சம்


UPDATED : மார் 07, 2013 12:00 AM

ADDED : மார் 07, 2013 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2013 12:00 AM ADDED : மார் 07, 2013 09:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, தெற்கு கண்ணாடிபுத்தூர் பள்ளியில் பள்ளி வளாகத்துக்குள் ஆபத்தான நிலையில் திறந்தவெளி கிணறு இருப்பதால் பொதுமக்கள், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

மடத்துக்குளம் அருகேயுள்ள, தெற்கு கண்ணாடிபுத்தூர் அரசுஉயர்நிலைபள்ளியில் 160 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி வளாகத்தில், பயன்பாட்டிலிருந்து நீக்கி பல ஆண்டுகள் ஆன கழிப்பிடம், திறந்தவெளி கிணறு, முட்புதர்கள் உள்ளன. பெற்றோர் கூறியதாவது: "பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் திறந்தவெளி கிணறுஉள்ளது. இதற்கு பாதுகாப்பு வலை அமைக்க வேண்டும். பல இடங்களில் தாவரங்கள் அடந்து வளர்ந்து புதர்களாகி உள்ளது. புதர்களை அப்புறப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பாழடைந்து இடிந்து விழும் நிலையிலுள்ள கழிப்பிடங்களை அகற்ற வேண்டும். இது குறித்து ஆசிரியர்களிடமும், அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த விதமான மேல் நடவடிக்கையும் இல்லை." இவ்வாறு பெற்றோர் கூறினர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us