தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில் முனைவோர் ஊக்குவிப்பு கருத்தரங்கம்

தொழில் முனைவோர் ஊக்குவிப்பு கருத்தரங்கம்

தொழில் முனைவோர் ஊக்குவிப்பு கருத்தரங்கம்


UPDATED : மார் 07, 2013 12:00 AM

ADDED : மார் 07, 2013 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2013 12:00 AM ADDED : மார் 07, 2013 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலூர்: வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான கருத்தரங்கில், பெரம்பலூர் கலெக்டர் பங்கேற்று பேசினார்.

பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கும் திட்டம் குறித்து, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு கருத்தரங்கு, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கருத்தரங்கை கலெக்டர் தரேஷ் அஹமது துவக்கி வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வர் தொழில் முனைவோர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதிதாக தொழில் துவங்க, தமிழக அரசால், 15 சதவீதம் முதலீட்டு மானியம், மின்சார கட்டணத்தில், 20 சதவீத மானியம், 25 சதவீத ஜெனரேட்டர் மானியம், 100 சதவீத மதிப்பு கூட்டுவரி மானியம் மற்றும் பெண் தொழில் முனைவோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஐந்து சதவீத கூடுதல் முதலீட்டு மானியம் போன்ற பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகிறது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், மாவட்டத்தில், 2011-2012ம் ஆண்டில், 64 நபர்களுக்கு, 99.49 லட்சம் ரூபாய் மதிப்பில் தொழில் துவங்க, 14.92 லட்சம் ரூபாய் மானியத்துடன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2012-2013ம் ஆண்டுக்கு இதுவரை, 82 நபர்களுக்கு, 113.47 லட்சம் ரூபாய் மதிப்பில் வங்கிகளிடம் கடன் ஒப்பளிப்பு ஆணை பெறப்பட்டு, 30 பயனாளிகளுக்கு, 45.20 லட்சம் ரூபாய் கடன் தொகையில், 6.78 லட்சம் ரூபாய் மானியத்துடன் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட முன்னேற்றத்துக்கு தொழிற்சாலைகள் அதிக முக்கியத்துவமாக உள்ளது. ஒரு மாவட்டம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், செயல் திறன் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காசோளம், பருத்தி, வெங்காயம் போன்ற வேளாண் பொருட்கள், அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பிற இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்களை கொண்டு, தொழிற்சாலைகள் அமைக்கலாம். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாவட்ட அளவில் பொருளாதாரமும் உயரும். எனவே அனைவரும் முழு வேகத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கருத்தரங்கில் டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், பி.ஆர்.ஓ., கண்ணதாசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மகாலிங்கம், நபார்டு வங்கி மேலாளர் கோதண்டபாணி, முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், கனரா வங்கி மேலாளர் சுரேஷ்குமார், சிறுதொழில் சங்கத்தலைவர் உதயகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us