அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி
அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி
UPDATED : மார் 15, 2013 12:00 AM
ADDED : மார் 15, 2013 08:37 AM
சிதம்பரம்: இலங்கை அரசை கண்டித்து தொடர்ந்து 4ம் நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களில் இதுவரை 13 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 11ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாணவர்கள் மூன்று மாணவர்கள் மயக்கமடைந்தனர். நேற்று 4வது நாளாக உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த 35 மாணவர்களில் வசந்தராஜன், ராஜன், மணிகண்டன், சிவராஜ், ஜெகதீஷ், விஜயகுமார், ராகுல், நாகராஜ், கந்தவேல், சரத்குமார் ஆகிய 10 மாணவர்கள் உட்பட இதுவரை 13 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவின் பேரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். அனைவருக்கும் நாடித்துடிப்பு குறைந்துள்ளது, நான்கு மணி நேரத்திற்கு மேல் மேலும் குறைந்து அபாய நிலை ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
