தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் உடைக்கு கட்டுப்பாடு: ஆசிரியர்கள் எதிர்ப்பு

ஆசிரியர்கள் உடைக்கு கட்டுப்பாடு: ஆசிரியர்கள் எதிர்ப்பு

ஆசிரியர்கள் உடைக்கு கட்டுப்பாடு: ஆசிரியர்கள் எதிர்ப்பு


UPDATED : மார் 19, 2013 12:00 AM

ADDED : மார் 19, 2013 12:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2013 12:00 AM ADDED : மார் 19, 2013 12:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஆசிரியைகள் வாரத்திற்கு 3 நாட்கள் சீருடைஅணிந்து, கொண்டையிட்டு, குறைந்த "மேக்கப்" மற்றும் நகைகள் அணிந்து வரவேண்டும்; ஆசிரியர்கள் முழு நீள சட்டை அணிந்து, "ஷூ" அணிந்து வரவேண்டும் என்று, கட்டுப்பாடு விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இம்முடிவு, கல்விக் குழுத் தலைவர் சுகந்தி, கல்வி அலுவலர் மதியழகு ராஜா தலைமையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆசிரியைகள் சீருடை அணிந்து வரவேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் ஆசிரியர்களுக்கு எதிரானது. இந்த முடிவை கைவிட வேண்டும். அலுவல் சார்ந்த பல விஷயங்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் செயல்பாட்டிலும் கல்வி குழுத் தலைவரின் கணவர் அசோக் தலையிடுகிறார். அவர் மீது கமிஷனர் நந்தகோபால் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us