தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேருந்து மேற்கூரையில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

பேருந்து மேற்கூரையில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

பேருந்து மேற்கூரையில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்


UPDATED : மார் 22, 2013 12:00 AM

ADDED : மார் 22, 2013 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2013 12:00 AM ADDED : மார் 22, 2013 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: பள்ளி மாணவர்கள் பேருந்து மேற்கூரையில் செய்யும் ஆபத்தான பயணத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புதுச்சத்திரம், சாமியார்பேட்டை, சிலம்பிமங்களம், வில்லியநல்லூர், அத்தியாநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான மக்கள் கூலி வேலைக்கு தினம் பேருந்தில் சென்று வருகின்றனர்.

காலை நேரங்களில் மாணவர்களுக்கு புதுச்சத்திரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு பேருந்து வசதி இல்லை. புதுச்சத்திரம் வழியாக பரங்கிப்பேட்டைக்கு காலை 8:00 மணிக்குச் இயக்கப்பட்ட அரசு பேருந்து தற்போது 8:45 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் சென்றால் பள்ளி நேரத்திற்குச் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

போதிய வசதிகளின்றி இயக்கப்படும் ஒரு சில தனியார் பேருந்துகளில் பள்ளி, அலுவலக நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனால் பேருந்தில் நெரிசல் ஏற்பட்டு இடமின்றி மாணவர்கள் பஸ்சின் மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் மாணவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

அதிகாரிகள் கண்காணித்து பள்ளி, அலுவலக நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us