தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை தேர்வு திடீர் ரத்து: மாணவர்கள் அவதி

பல்கலை தேர்வு திடீர் ரத்து: மாணவர்கள் அவதி

பல்கலை தேர்வு திடீர் ரத்து: மாணவர்கள் அவதி


UPDATED : மார் 24, 2013 12:00 AM

ADDED : மார் 24, 2013 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2013 12:00 AM ADDED : மார் 24, 2013 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்றும் (மார்ச் 23), இன்றும் (மார்ச் 24) காலை 10 முதல் மதியம் 1 மணி, மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கான மையங்களும் அறிவிக்கப்பட்டன.

திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல் நிலைப்பள்ளி உள்பட சில பள்ளி, கல்லூரிகள் தேர்வு மையங்களாக ஏற்பாடு செய்திருந்தனர். தேர்வு எழுத காலை 9 மணிக்கு மாணவர்கள் மையங்களுக்கு வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது, தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும், மேலும் விபரம் பெற பயிற்சி மைய அதிகாரியை அணுகவும் என, எழுதி வைக்கப்பட்டிருந்தது.

முன் அறிவிப்பின்றி திடீரென தேர்வுகளை ரத்து செய்ததால் மாணவர்கள், ஏமாற்றத்தால் வேதனையுடன் திரும்பினர். இலங்கைத் தமிழர் பிரச்னையையொட்டி உருவான மாணவர் போராட்டங்களால், அனைத்து கல்லூரிகளும் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் இத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறினர்.

இதுகுறித்து, முறையான அறிவிப்பை நேற்றே வெளியிட்டிருந்தால், மாணவர்கள் ஏமாற்றத்தை தவிர்த்திருக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us